×

நாகல்குளத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் நெல்லை, அக். 4: நாகல்

குளத்தில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் மழைநீர் வீடுகளை சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கீழப்பாவூர் ஒன்றியம் நாகல்குளம் கிராமம் ராஜா தெருவில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இத்தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதியில்லை. இதனால் மழை காலங்களில், இத்தெருவில் உள்ள வீடுகளில் மழை தண்ணீர் குளம்போல் சூழ்ந்து தேங்குகின்றன. மழைநீர் வெளியேற வசதியில்லாததால், சகதி காடாக மாறி துர்நாற்றம் வீசுகின்றனஇப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மெயின் ரோட்டுக்கு செல்ல தேங்கி கிடக்கும் தண்ணீரில் இறங்கித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மேலும் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகவும் மாறி பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொண்டு நாகல்குளம் ராஜா தெருவில், கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Rainwater harvesting ,home ,Nagaland ,Nagel ,
× RELATED சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி...