×

சாத்தான்குளம் - சென்னை அரசு விரைவு பஸ் திடீர் நிறுத்தம்

சாத்தான்குளம், அக்.4: இடையன்குடியில் இருந்து சாத்தான்குளம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் தொடர்ந்து  3 நாள்களாக நிறுத்தப்பட்டதால்  பயணிகள் ஏமாற்றம் அடைந்துளளனர். நெல்லை மாவட்டம் இடையன்குடியில் இருந்து சாத்தான்குளம், நெல்லை வழியாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. முன்னர் அங்குள்ள ஏஜென்ட் மூலம்  இருக்கைகள் புக் செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ஆன்லைன்மூலம் இருக்கைகள் புக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த விரைவு பஸ் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென கடந்த 3நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் சாத்தான்குளம் பகுதியில் இருந்து பஸ்சில் பயணிக்க புக் செய்தவர்கள்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். பஸ் வராததால்  டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் நெல்லை சென்று வேறு பஸ்சில்  பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே   போக்குவரத்து கழக அதிகாரிகள் தற்போது தசரா விழா காலங்களில் முறையாக பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், சாத்தான்குளம் வழியாக சென்னைக்கு இந்த அரசு விரைவு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் லாபத்துடன்தான்  இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது தசரா, தீபாவளி காலங்கள் என்பதால் சொந்த ஊருக்கு பலர் வந்து திரும்பிகின்றனர். இந்த வேளையில் பஸ் நிறுத்தப்படுவதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பயணியர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னை செல்லும் விரைவு பஸ் முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Chennai ,government bus stop ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...