தனியார் ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

குளத்தூர்,அக்.4: கருங்குளம் சங்கராபுரம் பொட்டல் புதுதெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருணாசலம்(35). இவரது மனைவி நீலவாணி. திருமணமாகி 5 வருடமாகிறது. குழந்தைகள் இல்லை.அருணாசலம் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த தருவைகுளம் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு வந்த அருணாசலம் ஆலையில் உள்ள மெஷின் மீது மேலே ஏறியபோது. தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த தருவைகுளம் போலீசார் அருணாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து எஸ்ஐ ராஜ்குமார் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரித்து வருகிறார்.

Tags : businessman ,
× RELATED பெண் தொழிலாளியுடன் கள்ளத்தொடர்பு...