×

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி

கோவில்பட்டி, அக்.4: கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதில் சின்னப்பன் எம்எல்ஏ, நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன், பாண்டவர்மங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ், இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், நகர நிலவள வங்கி தலைவர் ரமேஷ், வேலுமணி, ரத்தினவேல், பாபு, போடுசாமி, சவுந்திரராஜன், பாலமுருகன், ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, வெள்ளத்துரை, செண்பகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Gandhi Jayanthi ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் பால் கொள்முதல் செய்ய...