×

தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரி திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைத்து போராட்டம்

திருச்செந்தூர், அக்.4:  மெஞ்ஞானபுரம் அருகே எழுவரைமுக்கி பஞ்சாயத்தைச் சேர்ந்தது தாய்விளை கிராமம். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ. தொலைவில் உள்ள தோப்பூரூக்கு தான் செல்ல வேண்டும். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பகுதி நேர ரேஷன் கடை கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் ரேஷன்கடை அமைத்து தர ஒப்புதல் வழங்கினர். ஆனால் ரேஷன் கடை அமைக்காததை கண்டித்து தாய்விளை கிராமமக்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.  நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்த மக்கள் திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் ஆர்டிஓ தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தாய்விளையில் பகுதி நேர ரேஷன்கடைக்கு கலெக்டரிடம் நேரில் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அதிகாரிகளின் அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.
வெகுநேரமாகியும் ஆர்டிஓவிடமிருந்து எந்த தகவலும் வராததால் மாலை 6.30 மணியளவில் கிராம மக்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை அங்கிருந்த ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் டேபிளில் வைத்து விட்டு சென்றனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைசெழியன், துணை அமைப்பாளர் ராவணன், கருத்தியல் பரப்புரை மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

Tags : office ,Thiruchendur RTO ,ration shop ,Thailand ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...