தூத்துக்குடியில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி,அக்.4: தூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ பெருமாள் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது பங்கேற்ற வேண்டும்.  கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.  இத்தகவலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Executive Committee Meeting ,Thoothukudi ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் செயற்குழு...