×

சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம்

தா.பேட்டை, அக்.4: முகாமிற்கு முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் ஆறுமுகம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மோகன் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் லதா வரவேற்றார். முகாமில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். அங்கிருந்த பொதுமக்கள் ஜம்புமடை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி, குளம், குட்டை ஆகியவற்றை தூர்வார வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 71 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 61 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் இதர துறை அலுவலர்களின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Special Campaign Day Completion Camp ,
× RELATED அதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால்...