×

தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்த 2பேர் மீது அரசு டாக்டர் புகார்

துறையூர், அக்.4: துறையூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண்மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவாக பேசிய இருவர் மீதுநடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவி மருத்துவராக நித்யா பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலான சுகாதார நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு மாலையில் புடலாத்தியை சேர்ந்த பாலகுமரன்(27) என்பவர் குடிபோதையில் வாய், நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற சென்றார்.

அவருக்கு உரிய சிகிச்சை வழங்கிய பின்னர் நாளை (இன்று) காலை பல் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுமாறு நித்யா அறிவுறுத்தினார். அப்போது பாலகுமரனுடன் சென்ற மோகன்தாஸ் என்பவர் மருத்துவர் நித்யாவை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இந்நிலையில் வாக்குவாதத்தை கேட்டு அங்கு சென்றமருத்துவமனை பணியாளர்கள் நாகராஜ், ஓட்டுனர் அன்பழகன் ஆகியோரையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து இருவரும் சென்றனர். இது தொடர்பாக மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Government doctor ,persons ,poor ,
× RELATED சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது