×

உடனடி கடன் வழங்கும் திட்டத்தில் வாடிக்கையாளர் 228 பேருக்கு ரூ.18.68 கோடி கடனுதவி ஸ்டேட் வங்கி வழங்கியது

திருச்சி, அக்.4: உடனடி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி மண்டல ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் 228 பேருக்கு ரூ.18.68 கோடி கடனை வழங்கியது. நாடு முழுவதும் கடன் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கடன் வழங்கும் திட்ட முகாமை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நேற்று இந்தியா முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் திட்டத்தை நடத்தியது. இதன் மூலம் சில்லரை மற்றும் சிறு குறு வணிகம், தனி நபர் கடன், வீடு கட்டிட கடன், வாகனம் மற்றும் தொழில் துவங்க கடன், தொழில் அபிவிருத்தி கடன் வழங்கி பொருளாதாரத்தை வளப்படுத்த இந்த திட்டதை அளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஐஓபி தலைமையில், பொதுத்துறை, தனியார் வங்கிகள் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. திருச்சி மண்டல பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் 228 பேருக்கு ரூ.18.68 கோடி கடனுதவியை நேற்று வழங்கியது. இதில் ஸ்டேட் வங்கியின் சென்னை மாநில தலைமை பொதுமேலாளர் வினாய் எம் டான்ஸ், திருச்சி மண்டல துணைப் பொதுமேலாளர் சஞ்சீவ் நாயர், மண்டல மேலாளர் சமீரா பர்வீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : State Bank of India ,
× RELATED பழநி கணக்கன்பட்டியில் விபத்தில்...