×

சாக்கடை கழிவு நீர் தேக்கம் கடும் சுகாதார சீர்கேடு

திருப்பூர், அக்.4: திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாநகராட்சிப்பகுதியோடு தொட்டிபாளையம் ஊராட்சி இணைக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவுவதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நீர்வழிப்பாதையை  தனியார் ஒருவர் தடுத்து தடுப்பு சுவரை கட்டியுள்ளார். இது குறித்து ஊராட்சி தலைவர் சப்-கலெக்டரிடம் முறையிட்டார். இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என் இடத்தில் தடுப்பு சுவர் அமைத்துள்ளேன். இதை யாரும் தடுக்க முடியாது என வாதிட்டார். ஆனால், விதிமுறைப்படி இயற்கையாக அமைந்துள்ள நீர் வழிப்பாதைகளை தடுப்பது குற்றமாகும். தடுப்பு சுவரை இடித்து சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் கட்ட உத்தரவிட்டார். இதுவரை கழிவு நீர் கால்வாய் கட்டாததால் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கையாக சாக்கடை வடிகால் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...