×

மருத்துவமனையில் தூய்மைப்பணி

திருப்பூர், அக்.4: திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ், சேவாபாரதி தென் தமிழ்நாடுசார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி  திருப்பூர் அரசு சித்த மருத்துவ மனையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.  திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ், சேவாபாரதி தென் தமிழ்நாடு, பிரேரனா அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி  திருப்பூர் அரசு சித்த மருத்துவ மனையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.  நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தென் தமிழ்நாட்டின் மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்து  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்எஸ்எஸ் திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் மோகன சுந்தரம் மகாத்மா காந்தி கண்ட கனவு, தூய்மை இந்தியாவின் நோக்கம், நம் நாட்டு மக்கள் வீட்டை மட்டுமல்ல நம் நாட்டையும் தூய்மையாக வைக்க வேண்டும், சேவையினால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள்” பற்றி சிறப்புரை ஆற்றினார். சேவா பாரதி அமைப்பைச்சார்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை:கர்மவீரர் மக்கள் பொதுநல சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா உடுமலையில் நடந்தது. மாநில தலைவர் சிகான் குப்புசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சந்திரசேகரன், முருகேசன், சோமசுந்தரம், விஜயகுமார், மணிகண்டன், கருப்புசாமி, சமூக ஆர்வலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காந்தி, காமராஜர், சாஸ்திரி படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்