×

மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், அக்.4: பலத்த மழையால் மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை  பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று இரவு தாய்சோலை, கேரிங்டன், கோரகுந்தா,  அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கோலட்டி  என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து  ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. மஞ்சூர் மற்றும் கிண்ணக்கொரை, இரியசீகை, அப்பர்பவானி  பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின்  இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது. இதை தொடர்ந்து தகவல் அறிந்த  நெடுஞ்சாலை துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த  மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சூர்  கிண்ணக்கொரை சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags : road ,Manjur-Kinnakorai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...