×

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஊட்டி, அக்.4: காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களின் வேலை வாங்குகிறதா என தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் என 36 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 14 கடைகள் மற்றும் 14 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 28 நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறையோ அளிக்கவில்லை எனத் தெரியவந்தது.இதை தொடர்ந்து, அந்த நிறுவனங்கள் மீது, உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்களின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்று தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்களுக்கு முறையான விடுமுறை மற்றும் இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : companies ,holiday ,Gandhi Jayanti ,
× RELATED சலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து...