×

சம்பளம் நிலுவை வழங்க கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கோவை, அக்.4:சம்பள நிலுவை வழங்க கோரி கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஒப்பந்த ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சாய்பாபாகாலனி பாரதி பார்க் ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் மண்டல பொது மேலாளர் அலுவலகம் வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். இதில், கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அலுவலக பராமரிப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி கடந்த 8 மாத நிலுவை சம்பளத் தொகையை வழங்கவில்லை. இதை வழங்ககோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : BSNL ,contract workers ,
× RELATED பிஎஸ்என்எல் சேவையில் திடீர்...