×

ஆசனூரில் அங்கன்வாடி மையம் இடிந்து விழும் அபாயம்

சத்தியமங்கலம், அக்.4: ஆசனூர் மலை கிராமத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுவர்கள் இடிந்த நிலையில் காரை பெயர்ந்து வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வந்த நிலையில் கட்டிடம் மிக மோசமாக இருந்ததால் அதே பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் 3 ஆண்டுகளாக தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என மலைகிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் ஆசனூர் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்