×

தூய்மை இந்தியா திட்டம் குறித்து கோலம் வரைந்து விழிப்புணர்வு

ஈரோடு, அக். 4:  மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ரங்கோலி கோலம் வரைந்தனர். தொடர்ந்து மரக்கன்றுகளும் நடப்பட்டது.
மத்திய அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மையை ஏற்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரித்து வருவதால் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் அந்த இடங்களில் குப்பைகளை கொட்டாத வகையில் கோலம் வரைந்தும், மரக்கன்றுகளை நட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நேற்று ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்தின் சார்பில் தங்கபெருமாள் வீதி, ராயல் ஸ்டேஜ், மரப்பாலம் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது. மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டது. இதனை மண்டல உதவி ஆணையர் அசோக்குமார், சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன், சுகாதார ஆய்வாளர் நாச்சிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை