×

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக ரூ.800 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு

ஈரோடு, அக். 4: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் கூறியுள்ளதாவது, ‘‘ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 2019-20ம்ஆண்டிற்கு பயிர்கடன் வழங்க  ரூ.800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு இணைக்கப்பட்டுள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 228 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.275.20 கோடி பயிர்கடன்கள் எவ்வித தடங்கலும் இன்றி விரைவாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட பயிர்கடன் ரூ.201.66 கோடி  விட கூடுதலாக ரூ.73.54 கோடி நடப்பாண்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதாலும், அனைத்து வாய்க்கால்களிலும் பாசனததிற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் பயிர்சாகுபடி செய்வதற்கு பயிர்கடன் தேவைப்படும் விவாயிகள் தற்போது அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்பித்து கடன் பெறலாம். கடன் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் வங்கியின் உயர் அலுவலர்களை அணுகலாம்.

Tags : District ,Central Cooperative Bank ,Rs ,
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...