×

பரமத்தி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

பரமத்திவேலூர்,  அக். 4: காந்தி ஜெயந்தியையொட்டி, பரமத்தி பேரூராட்சி மற்றும்   சுகாதாரத்துறை, பரமத்தி அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து, மரக்கன்றுகள் நட்டனர். பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும்  ஆசிரியர் காலனி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு  உறுதிமொழியேற்றனர். பின்னர், பரமத்தி மெயின்ரோட்டில் உள்ள  கடைகள், வணிக  நிறுவனங்கள், ஹோட்டல், பேக்கரி மற்றும் குடியிருப்பு பகுதிகளில், சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.இந்நிகழ்ச்சியில்  பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர் செந்தில்குமார், சுகாதாரத்துறை பணியாளர்கள், பேரூராட்சி  துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். .

Tags : Tree Planting Ceremony ,
× RELATED 75வது சுதந்திர தினத்தையொட்டி சந்தோஷி கல்லூரியில் மரம் நடும் விழா