சேந்தமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சேந்தமங்கலம், அக்.4: சேந்தமங்கலம், எருமப்பட்டி பேரூராட்சிகளில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேறறு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன் பங்கேற்று, இரு பேரூராட்சிகளிலும் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள், வார்டு பகுதிகளில் உள்ள சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் பாலுசாமி, துப்புரவு ஆய்வாளர் சங்கரகுமார், இளநிலை உதவியாளர்கள் தேவராஜன், சுரேஷ்ராஜ், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், பூபதி, சக்திவேல் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : tree planting ceremony ,Sendamangalam ,
× RELATED பென்னாகரத்தில் 3,000 மரக்கன்று நடும் விழா