×

சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி 3 பேர் படுகாயம்

சூளகிரி, அக்.4: சூளகிரி அருகே மேலுமலை-கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை 5 மணியளவில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பஸ், 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறி கெட்டு ஓடியது. பின்னர், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், லாரியின் பின்பகுதியும், பஸ்சின் முன்பகுதியும் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus crashes ,Sulagiri ,
× RELATED மனைவியுடன் தொடர்பு வைத்ததால்...