×

தடங்கம் பகுதியில் பஸ்களின் உதிரி பாகங்களை எரிப்பதால் மூச்சுத்திணறல்

நல்லம்பள்ளி, ஆக.4: நல்லம்பள்ளி அருகே தடங்கம் பகுதியில் அரசு பஸ்களின் உதிரிபாகங்களை எரிப்பதால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தடங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு வெளிப்புறத்தில், தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணி மணையில் சேகரமாகும் பஸ்களின் உதிரிபாகங்களை எடுத்து வருகின்றனர். இவற்றில் இருக்கும் இரும்பு பொருட்களை எடுப்பதற்கு மற்றும் தேவையற்ற சீட் கவர்களை தீ வைத்து எரிக்கின்றனர்.அதிலிருந்து எழும் நச்சு புகை, தடங்கம் பகுதி முழுவதும் பரவுகிறது. இதனால், பொதுமக்களுக்கு, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியதன் ேபரில், பஸ்களின் உதிரி பாகங்களை எரித்த நபர்களுக்கு ேநாட்டீஸ் கொடுத்தனர்.     ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல், வழக்கம் போல் உதிரி பாகங்களை எரித்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : trail area ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா