×

சூளகிரி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த

குண்டு வெடித்து மாடு படுகாயம்சூளகிரி, அக்.4: மலை குன்றுகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காட்டையொட்டியே விளைநிலங்கள் உள்ளன. இதனால், அடிக்கடி விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் விதி மீறி சிலர் நாட்டுத்துப்பாக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் வராத வகையில் வெடிகளை பதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், சூளகிரி அருகே மலகலக்கி கிராமத்தைச் சேர்ந்த கங்கப்பா என்பவர் தனக்கு சொந்தமான மாட்டை அங்குள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். சிறிது நேரத்தில், மாடு மேய்ச்சலுக்காக சென்ற இடத்தில் இருந்து “டமார்” என பயங்கர சத்தம் எழும்பியதை கேட்டு திடுக்கிட்ட கங்கப்பா அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வாய் மற்றும் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் மாடு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே, அருகில் சென்று பார்த்தபோது, அப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புற்களை மேய்ந்தபோது அதனை சேர்த்து கடித்ததால் வெடித்துச் சிதறியதில் மாட்டின் வாய் பகுதி சிதைந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில், பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sulagiri ,
× RELATED சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...