×

ராஜபாளையத்தில் போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், அக். 4: ராஜபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 7க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜபாளையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அமமுக தொழிற்சங்கம்,  தொழிலாளர் பாதுகாப்பு பேரவை, புதிய தமிழகம், டி.டி.எஸ்.எப், எல்.பி.எஃப் ஏஐடியுசி,உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில்  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 154 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,  2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் எனவும், 14வது ஊதிய ஒப்பந்தத்தை சுமுகமான முறையில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரியும், மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள அகலவிலைப்படி 11 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் தினக்கூலி ஓட்டுநர், நடத்துனர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து கட்சி தொழிற்சங்கம்  சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்  கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Trade unions protests ,transport workshop ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...