காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது

சிவகாசி, அக். 4:  காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக கொங்கலாபுரத்தை சேர்ந்த பாண்டியன்(36). ரெங்கசமுத்திரபட்டியை சேர்ந்த பழனிச்சாமி(45) கிருஷ்ணன்கோயிலை சேர்ந்த பிரகாஷ்(25) சுக்ரார்பட்டியை சேர்ந்த முருகன்(45) ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.Tags : Gandhi Jayanthi ,
× RELATED மது கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை