ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெருக்கடியில் திணறும் தமிழக எல்லை

கூடலூர், அக். 4: குமுளி தமிழக எல்லைப்பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால், மாலை நேரங்களில் எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கூடலூர் நகராட்சியின் 21வது வர்டுபகுதியான குமுளி, தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப்பகுதியாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களிலிருந்தும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் குமுளிக்கு வந்து செல்கின்றன. தமிழக எல்லைப்பகுதி குமுளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்கு பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதியும், பஸ்டாண்ட் வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் பெர்மிட் வாங்க தமிழக எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துகின்றனர். தேக்கடி சுற்றுலா சென்று திரும்பும் தமிழக சுற்றுலாப்பயணிகள் ஏலம், மிளகு, சிப்ஸ், ஆயத்த ஆடைகள் போன்ற பொருட்கள் வாங்குவதற்காக குமுளியில் இறங்குகின்றனர்.இவர்களது வாகனங்கள் தமிழகப்பகுதிக்குள் நிறுத்தப்படுகிறது. மேலும் குமுளி தமிழக எல்லைப்பகுதியில் சென்னை, பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை சரிசெய்ய அதிக போலீசார் நியமிக்கவேண்டும் என பொதுமக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : border crossing ,Tamil Nadu ,Omni ,
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...