×

காந்தி நூற்றாண்டு விழாவில் கம்பம் எம்எல்ஏ மரக்கன்று நட்டார்

உத்தமபாளையம், அக். 4: க.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் காந்தி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நகரில் மரக்கன்றுகளை கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் நட்டார்.க.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் காந்தி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். பேரூராட்சியின் தூய்மை செயல்பாடுகள் பற்றியும், மக்கும், மக்காத குப்பைகளின் பயன்பாடுகள் பற்றியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.ஜக்கையன் பேசினார்.பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும், இயற்கையை பாதுகாத்திட மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தெடாடர்ந்து நகரின் அனைத்து வார்டு பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கடைகள் வழியாக நடந்து சென்ற அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்பது பற்றி மக்களிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.Tags : Kambam MLA ,Gandhi ,centenary ,
× RELATED மரக்கன்று நடும் விழா