×

போடி கொட்டகுடி ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

போடி, அக். 4: போடி கொட்டகுடி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி இரு சக்கர வாகனத்தில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.போடி புதூர் பகுதியில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மூடைகளுடன் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கொண்டு வந்த மூடைகள் மணல் மூடைகள் என்பது தெரிந்தது.விசாரணையில் புதூரை சேர்ந்த சதீஸ் என்ற பெருமாள் (28) என்பதும், கொட்டகுடி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி ஐந்து மூடைகள் இரு சக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சதீஸ மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Tags : Sandi ,river ,Bodi Kotakudi ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...