×

தேனி டிகேஎஸ் இன்ஜி.கல்லூரி ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

தேனி, அக். 4: தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது.தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ரோட்டரி சங்க தலைவர் பிரபாகரன், செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.தேர்வின்படி, ரோட்ராக்ட் சங்க தலைவராக செல்வன்.சரத்பாண்டி, செயலாளராக விஜயராகவன் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, கல்லூரி செயலாளர் சந்திரசேகரன், முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ்நாராயணன் கலந்து கொண்டு பாராட்டினர்.நிகழ்ச்சியின்போது, கிராமப்புற மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது, சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது என தீர்மானங்களை நிறைவேற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அப்துல்ஹமீது செய்தார்.

Tags : Theni ,TKS Engi Collory Roadrock Association Executives ,
× RELATED தேனியில் பரபரப்பு அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்?