×

உத்தமபாளையம் விகாசா பி.எட். கல்லூரியில் புற்று நோய் விழிப்புணர்வு முகாம்

உத்தமபாளையம், அக். 4: உத்தமபாளையம் விகாசா பி.எட்., கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.உத்தமபாளையம் விகாசா பி.எட்., கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கல்லூரி செயலர் இந்திராஉதயகுமார் தலைமையில் நடந்தது. போடி மகளிர் முன்னேற்றசங்கம், மற்றும் பி.எட்., கல்லூரி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு செயற்பாட்டாளர் கீதாமோகன், பெண்நலம் பற்றி ஆரோக்கியமேரி, டாக்டர் ஜெயந்தி, சாரா, லட்சுமிமோகன் உள்ளிட்ட பலரும் பேசினர். இதில் பெண்கள் நோயில்லாமல் வாழ்வது எப்படி, கர்ப்பபை புற்றுநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள், பெண்கள் தடுப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பற்றி பேசினர். நிகழ்ச்சியில் பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Uthamapalayam ,Vikasa Ph.D. Cancer Awareness Camp ,College ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...