×

வீரப்ப அய்யனார் கோயிலில் விவசாயிகள் அன்னதானம்

தேனி, அக். 4: பொம்மையகவுண்டன்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பாக வீரப்ப அய்யனார் கோயிலில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக வீரப்ப அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள், ஆதாரனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தேனி வட்டார மா விவசாயிகள் சங்க தலைவர் சுருளி, நிர்வாகிகள் பரமசிவம், வீர்சாமி, பெருமாள், மாயாண்டி, மணி, சிவராமன், ராமர், ராஜா, தேனி வக்கீல் கிருஷ்ணக்குமார், மலைத்தோட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.விவசாயிகளுக்கும், மலைப்பகுதிகளில் வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.Tags : Veerappa Ayyanar Temple ,palace ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...