×

தாம்பரம், கேகே நகரில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரி, அக். 4: ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம் மற்றும் கேகே நகரில் இருந்து புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.   வரும் 7ம் தேதி ஆயுதபூஜையும், 8ம் தேதி விஜயதசமியும் வருகிறது. அதற்கு முன்னதாக, சனி, ஞாயிறு 2 நாட்கள் வழக்கமான விடுமுறை என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. சென்னையில் பணிபுரியும் பலர், சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள். அதேபோல், ஐடி மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஆயுத பூஜைக்காக சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்கும் பொருட்டு நகருக்கு வெளியே புறநகர் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, புதுச்சேரிக்கு திண்டிவனம் மார்க்கமாக பைபாஸ் வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம் அருகிலுள்ள எம்டிசி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் பேருந்துகள் கேகே நகர் எம்டிசி பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது. இன்று (4ம் தேதி) முதல் நாளை (5ம் தேதி) வரை இந்த முறையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இத்தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட புதுச்சேரி கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : KK ,Tambaram ,
× RELATED வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய்...