×

கூட்டுறவு கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஸ்டிரைக்

புதுச்சேரி, அக். 4:  புதுவை கூட்டுறவு துறையின் கீழ் 2006ம் ஆண்டு முதல் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியானது புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் என்சிடிஇ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.51 ஆயிரம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் 8 உதவி பேராசிரியர்கள் பல வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.  இதற்காக கடந்த ஒரு வருடமாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நிலுவை சம்பளம் வழங்கக் கோரி உதவி பேராசிரியர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், கல்லூரி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : College of Cooperative Education Professors Strike ,
× RELATED கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்