என்ஆர் காங். தேர்தல் பணி அலுவலகம் இன்று திறப்பு

புதுச்சேரி, அக். 4:   காமராஜர் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் பணிக்கான அலுவலகத்தை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி இன்று திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் புவனேஸ்வரன் தேர்தல் பணிகளுக்காக, இன்று (4ம் தேதி) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் புதுச்சேரி புதுசாரம் பகுதியில் 45  அடி சாலை, சின்னையாபுரம் சாலையில் உள்ள 45 எண் இல்லத்தில்  தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெறவுள்ளது.  எதிர்க்கட்சி தலைவரும், என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் நிர்வாக பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து தோழமை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு, வீடாக வாக்குகளை சேகரிக்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற உழைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>