×

தேர்தல் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி, அக். 4:
விக்கிரவாண்டி நகர திமுக சார்பில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை
கூட்டம் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகர தேர்தல் பொறுப்புக்குழு தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. தலைமை தாங்கி பேசுகையில், மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் அதிமுகவுக்கு தேர்தலில் கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது. வேலூர் எம்பி தேர்தலில் வாக்குகள் வித்தியாசத்தை குறைத்துள்ளோம் என்று அதிமுக வேட்பாளரே கூறியிருக்கிறார்.  முத்தலாக் சட்ட அறிவிப்பு வெளிவரவில்லை என்றால் நாங்கள் ஜெயித்திருப்போம் என கூறியுள்ளார். நாம் இப்போது குருஷேத்திர போரில் உச்சக்கட்டத்தில் உள்ளோம். எனவே இந்த இடைத்தேர்தல் பணியினை மிகச்சிறப்பாக செய்து நமது வேட்பாளர் புகழேந்தியை வெற்றி செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் தேர்தல் பொறுப்பு குழு எம்எல்ஏக்கள் கணேசன், சுந்தர், சபா.ராஜேந்திரன், புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், சேகர், குமார், குமணன், பாபு, தமிழ்செல்வன், நகர செயலாளர் நயினாமுகமது, நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், இளைஞரணி பாலாஜி, முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் திலகர், சந்தானம், இளைஞரணி நிர்வாகிகள் பாபுஜி பாண்டியன், கார்த்திக், சிவா, மாணவரணி யுவராஜ் உட்பட 15 வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Election Advisory Meeting ,
× RELATED விவசாயிகள் எதிர்பார்ப்பு...