×

மக்களை பாடாய்படுத்தும் குண்டும் குழியுமான சாலை

ஆர்.எஸ்.மங்கலம், அக்.4:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டைக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அளிந்திக்கோட்டை கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் இந்த ஊருக்கு செல்லக் கூடிய சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் ஸ்ரீமா சானி அம்மன் என்ற திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகையால் இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும், உள்ளூர் பொதுமக்களும் டூவீலர் போன்ற வாகனங்களில் செல்லும் வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் இந்த சாலை பொதுமக்களின் நலன் கருதி விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்மந்தபட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : road ,pit ,
× RELATED பழுதடைந்த சாலையால் அவதி