×

இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, அக். 4:  ஆளும் அதிமுக.வின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரண்டு தொகுகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். இரண்டு தொகுதிகளும் தி.மு.க, காங்கிரஸ் கோட்டையாக உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தி.மு.க.வின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்துக்கு நாங்குநேரி தொகுதியில் நமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நகனிசெந்தில், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னத்துரை,  மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாவனி கணேசன், வழக்கறிஞர் அணி பாலசுப்பிரமணியன், தேவகோட்டை நகர செயலாளர் பாலமுருகன், நகர துணை செயலாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், சேவியர், மருத்துவஅணி துணை அமைப்பாளர் டாக்டர் பிரபாவதி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Periyakaruppanna ,victory ,DMK ,by-election ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்...