×

அண்ணாமலை பல்கலையில் தொலைதூர கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம், அக். 4: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான கடைசி தேதி வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் மற்றும் நேரடி சேர்க்கைக்கும் அருகாமையிலுள்ள தொலைதூர கல்வி இயக்ககத்தின் படிப்பு மையங்களை அனைத்து நாட்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு.படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு உதவி மைய எண்கள் 04144- 238043, 238044, 238045, 238046, 238047, 238610 மற்றும் ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன் தெரிவித்துள்ளார்.

Tags : Student Admission Date ,Annamalai University ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!