×

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கடலூர், அக். 4: கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர் விரோத செயல்பாட்டை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் சிப்காட் வளாகத்தில் இரண்டு தொழிற்சாலை, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்காக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்து அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தொழிற்சாலை நடவடிக்கையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் செந்தில் மற்றும் ராஜ்குமார், கணேஷ் உள்பட பலர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து அலுவலக வாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி மற்றும் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் போராட்டம் தொடரவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Siege ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...