×

தொண்டி, கீழக்கரையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

தொண்டி, அக்.4:  தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் நடைபெற்றது, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தை சுற்றிலும் கிடந்த பிளாஸ்டிக் பொருள்கள் சுத்தம் செய்யப்பட்டது. வீடுகள் மற்றும் தெருக்களில் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆசிரியை சுபஸ்ரீ உட்பட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதுபோல் கீழக்கரை நகராட்சி மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி கீழக்கரையில் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர்(பொ) தனலெட்சுமி, பொறியாளர் மீரா அலி, சுகாதார ஆய்வாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி கீழக்கரை காவல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கடற்கரை வரை சென்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் போட்டு கொண்டும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டும் சென்றனர். இதில் நகராட்சி மேற்பார்வையாளர்கள் மனோகரன், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை