×

டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

பேரையூர், அக். 4: டி.கல்லுப்பட்டியில் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  மாவட்டத்தலைவர் தங்கவேல்பாண்டியன் தலைமையில், மாவட்ட செயலாளர் பொன்கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் நல்மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் டி.கல்லுப்பட்டி மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சமையன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் மணிகிருஷ்ணன் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, நிலுவைத்தொகை, ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.கல்லுப்பட்டி யூனியன் ஆணையாளர் கலைச்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன் என்றும் கூறினார். இதனால் காத்திருப்பு போராட்டத்தை உள்ளாட்சித்துறை சங்கத்தினர் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : D.Kallupatti Union Office ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை