×

இன்று சிறப்பு திட்ட முகாம்

மதுரை, அக். 4: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.  கள்ளிக்குடி தாலுகாவில் நல்லமநாயக்கன்பட்டியிலும், மேலூர் தாலுகாவில் பள்ளப்பட்டியிலும், உசிலம்பட்டி தாலுகாவில் கீரிப்பட்டியிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் உத்தங்குடியிலும், வாடிப்பட்டி தாலுகாவில் சோலைக்குறிச்சியிலும் நடக்கிறது.

இதேபோல், மதுரை வடக்கு தாலுகாவில் பொதும்பிலும், பேரையூர் தாலுகாவில் எழுமலையிலும், மதுரை தெற்கு தாலுகாவில் கல்லம்பல்லிலும், மதுரை மேற்கு தாலுகாவில் வடிவேல்கரையிலும் நடக்கிறது. திருப்பரங்குன்றம் தாலுகாவில் தனக்கன்குளத்திலும் , திருமங்கலம் தாலுகாவில் எஸ்.புளியங்குளத்திலும் நடைபெறுகிறது. முகாமில், தாசில்தார் தலைமை வகித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். மனுக்கள் மீது அங்கேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வுகாணப்படும். வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags : project camp ,
× RELATED நீலகிாியில் 6 வட்டங்களில் 20ம் தேதி சிறப்பு திட்ட முகாம்