×

வாடிப்பட்டியில் எம்எல்ஏ ஆய்வு

வாடிப்பட்டி, அக்.4: வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள காலனி பகுதியில் கழிவுநீர் செல்ல முறையான வாய்க்கால் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம்  ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் அப்பகுதி மக்கள் சாக்கடை கழிவு நீரினை கடத்த முடியாமல் தெருவிலேயே தேங்கியிருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக சாலையைத் தோண்டி குழாய்கள் பதிக்குமாறும், அதற்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் உடனடியாக அனுமதி   வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார்.
பேரூராட்சி உதவி பொறியாளர் வரலெட்சுமி, மாநில கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத் தலைவர் செல்லப்பாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜேஸ்கண்ணா, அதிமுக  நிர்வாகிகள் முனியசாமி, கொரியர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : MLA ,
× RELATED சீரமைக்கப்படும் மேம்பால சாலை பணிகள்: எம்எல்ஏ, எம்பி ஆய்வு