×

மேலூர், வாடிப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

மேலூர், அக். 4: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் எம்எல்ஏ ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி ஊராட்சியில் உள்ள கண்மாய்கரையில் ஆயிரம் மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டது. மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலர் வெற்றிசெழியன், மேலூர் ஒன்றிய செயலர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தனர்.

 வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் திலீப், காமாட்சி, வாடிப்பட்டி வர்த்தக சங்க தலைவர் துரை என்கிற பாலச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் உரக்கடை ஆனந்த், பாபுவெங்கட்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தனர்.

Tags : Tree planting ceremony ,Wadipatti ,Melur ,
× RELATED திருமங்கலம், மேலூரிலிருந்து 2ம்...