×

தமிழக அணியில் அசத்திய பட்டிவீரன்பட்டி மாணவர்

பட்டிவீரன்பட்டி அக்.4: தேசிய கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற தமிழக அணியில் விளையாடிய பட்டிவீரன்பட்டி மாணவர் நவீன் பாராட்டப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, பீகார் ஆகிய இரண்டு அணிகளும் மோதின.
 
தமிழ்நாடு அணி இறுதிபோட்டியில் பீகார் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணியில் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மாணவன் நவீன் விளையாடினார். நவீனை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்தினர்.

Tags : Asathiya Pattiweeranpatti ,student ,Tamil Nadu ,team ,
× RELATED பெற்றோர்களுக்கும்...