×

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்

திண்டுக்கல், அக்.4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உடனே ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும், 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை அரசே முடிவு செய்யட்டும் என ஒப்புதல் கொடுத்து 80 ஆயிரம் பேரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதை கண்டித்தும், பணி ஓய்வு பெற்று சென்றாலும் தண்டனை என்ற பெயரால் தொழிலாளி பணத்தை பிடிக்க ஒப்புதல் கொடுத்து ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனை முன்பு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு எல்.பி.எப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் எல்.பி.எப் பணிமனை செயலாளர் பின்னத்தேவன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில தலைவர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் முருகேசன், திண்டுக்கல் பணிமனை செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை பற்றி விளக்கவுரையாற்றினர். நிறைவாக திண்டுக்கல் எல்.பி.எப் பணிமனை பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Transportation workers ,
× RELATED ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க...