×

கொடைக்கானலில் தொடர் மழை வேகமாக நிரம்பி வரும் அணைகள் நகராட்சி கமிஷனர் ஆய்வு

கொடைக்கானல், அக்.4: கொடைக்கானலில் தொடர் மழையால் குடிநீர் தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் குடிநீர் தேக்க அணைகள் உள்ளன. இந்த இரண்டு அணைகளும் கடந்த மாதம் தண்ணீரின்றி வறண்டு வந்தது. குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. இன்னும் சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்தால் இந்த இரண்டு அணிகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பும்.

தற்போது கொடைக்கானல் நகர் பகுதிக்கு குடிநீர் வழங்கக்கூடிய இரண்டு அணைகளையும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், பழைய அணையை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை நகராட்சி சீரிய முறையில் செய்து வருகிறது. தற்போது உள்ள இந்த தண்ணீர் அளவை கொண்டு இன்னும் ஆறு மாத காலத்திற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்றார்.

Tags : commissioner inspection ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்