×

காந்தி ஜெயந்தியன்றுவிடுமுறை அளிக்காத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) க.செந்தில் குமரன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் ம.குமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆ.அத்திப்பழம், சே.சாந்தினி, எஸ்.சுபாஷ்சந்தர், த.சாந்தி, மு.தனலட்சுமி, சி.மனோகரன், எம்.சாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள  திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான காந்தி ெஜயந்தியன்று பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய 67 நிறுவனங்கள் மீது நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 31 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 30 நிறுவனங்களிலும், ேமாட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 6 நிறுவனங்களிலும் என மொத்தம் 67 நிறுவனங்களில் 67 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை ெதாழிலாளர் உதவி ஆணையர் க.செந்தில் குமரன் தெரிவித்தார்.

Tags : companies ,Gandhi Jayanti ,
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!