×

மாநில போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்ட நெட்பால் அணிக்கு பயிற்சி முகாம்

ஜெயங்கொண்டம், அக்.4: மாநில அளவிலான நெட்பால் போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்ட அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், ஜெயங்கொண்டத்தில் நடந்தது.மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஐந்தாவது நெட்பால் போட்டி வரும் 6ம் தேதி முதல் 2 நாட்கள் மதுரையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் கடந்த 29ம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது. பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார். பயிற்சி முகாமில் வீராங்கனைகளுக்கு மாநில நெட்பால் கழக பொது செயலாளர் பாண்டியன் மற்றும் பயிற்சியாளர்கள் கார்த்திக், சிந்துஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் அரியலூர் மாவட்ட அணிகளில் கலந்து கொண்டு விளையாடும் வீராங்கனைகள் பயிற்சி பெற்றனர்.

Tags : Training Camp ,Ariyalur District Netball Team ,
× RELATED பாஜ நிர்வாகிகள் பயிற்சி முகாம்