பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்ட த்தில் 4கிரா மங்களில் இன்று (4ம்தேதி) சிறப்புத் திட்ட முகாம்கள் நடக்கிறது.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதா வது: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (4ம்தேதி) சிற ப்புத் திட்டமுகாம் நடை பெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்த ட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவத ற்காக தமிழக அரசின் சார்பாக சிறப்புத் திட்டமுகாம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் பொது மக்களை தேடிச்சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், திட்ட முகாம்கள் நடத்தப் படுகின்றது.இந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள்(உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டை கள் பெற பதிவுகள் செய் தல், குடும்ப அட்டைகளில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானம் மற் றும் இருப்பிட சான்றிதழ் கள், வாரிசுரிமைச் சான்றி தழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான் றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட் டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள், முதி யோர் உதவித்தொகை உள் ளிட்ட உதவித்தொகை கோ ரும் மனுக்கள், உழவர் பாது காப்புத் திட்டத்தின் உதவிக ள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரி ன் உழவர் பாதுகாப்புத் திட் டத்தின்கீழ் புதிய உறுப்பி னர்கள் சேர்த்தல், துயர் துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக் கூடிய இதர மனுக் கள் மீது ஆணைகள் பிறப் பித்தல் ஆகியவை அன் றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்ய ப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன.
உட னடியாக முடிவு செய்ய இய லாத விண்ணப்பங்களு க்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனு தாரரு க்கு தெரிவிக்கப்படும். சிறப்பு திட்ட முகாம் பெரம்பலூர் தாலுக்காவில் எசனை கிராமத்திலும், குன்னம் தாலுக்காவில் பென்னகோணம் (தெற்கு) கிராமத்திலும், வேப்பந்த ட்டை தாலுக்காவில் பூலா ம்பாடி (மேற்கு) கிராமத்தி லும், ஆலத்தூர் தாலுக்கா வில் செட்டிக்குளம் கிராமத் திலும் என 4கிராமங்களில் நடைபெற உள்ளன.பொதுமக்களின் பல்வேறு கோரி க் கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செய ல்படுத்துவதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட் ட பகுதி பொதுமக்கள் தவ றாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : project camp ,villages ,district ,Perambalur ,
× RELATED 6 வட்டங்களில் நாளை சிறப்பு திட்ட முகாம்