×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்ககோரி போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.4: போக்குவரத்துக் கழக தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் குமார் தலைமை வகித்தார்.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அக விலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ கிளைத் தலைவர் அந்தோணிராஜா, ஏஐடியூசி கிளைத் தலைவர் கோவிந்தன், ஏஏஎல்எல்எப் கிளை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : demonstration ,Transport Corporation Federation ,FUTA ,
× RELATED ஆர்ப்பாட்டம்